தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அஜித்தை விட விஜய் பெரிய ஸ்டார்.. ரசிகர்களை சீண்டிய ’வாரிசு’ தயாரிப்பாளர்.. - சினிமா

தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய்தான் பெரிய நடிகர் என்று வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

'அஜித்தை விட விஜய் பெரிய ஸ்டார்..’ ரசிகர்களை சீண்டும் ’வாரிசு’ தயாரிப்பாளர்
'அஜித்தை விட விஜய் பெரிய ஸ்டார்..’ ரசிகர்களை சீண்டும் ’வாரிசு’ தயாரிப்பாளர்

By

Published : Dec 16, 2022, 9:00 AM IST

சென்னை: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ’வாரிசு’. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தோடு அஜித் நடித்துள்ள ’துணிவு’ திரைப்படமும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் ’துணிவு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், ’வாரிசு’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும் வெளியிடுகிறது.

இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கு மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித் குறித்தும் ரெட் ஜெயன்ட் குறித்தும் பேசியது விவாதப் பொருளாகியுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் பெரிய நடிகர் என்பதால் கூடுதலாக 50 திரைகள் கேட்டபோது உதயநிதி மறுத்துவிட்டார். ஆகவே, உதயநிதியை சந்தித்து மீண்டும் பேசவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தில் ராஜூவின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் தாக்கிக்கொண்டிருக்கும் சூழலில், தில் ராஜூவின் இந்த மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக சினிமா விமசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:உதயநிதியை வாரிசு என்ற காரணத்துக்காகவே ஒதுக்கக்கூடாது - இயக்குநர் பார்த்திபன்

ABOUT THE AUTHOR

...view details