தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சத்தமில்லாமல் சாதித்த அஜித்தின் 'விடாமுயற்சி' - ரசிகர்கள் உற்சாகம்! - magizh thirumeni

vidaamuyarchi records: விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதனை படைத்த விடாமுயற்சி
சாதனை படைத்த விடாமுயற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 11:50 AM IST

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு துணிவு திரைப்படம் வெளியானது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடிரென கைவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி என்னும் படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அஜித், த்ரிஷா தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், அர்ஜுன் உள்ளிட்டோரும் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு விடாமுயற்சி படத்தில் இருந்து அப்டேட் வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எதுவும் வெளியாகவில்லை. இப்படத்தின் வியாபாரம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை மிகப் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனமும் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இசை உரிமத்தை சோனி நிறுவனம் வாங்கிவிட்டது என்கின்றனர். இப்போதே பல கோடி ரூபாய்க்கு வியாபாரத்தை செய்திருக்கும் விடாமுயற்சி படத்தின் இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர் எதுவுமே வெளியாகாத நிலையிலும், விடாமுயற்சி படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கு நடிகர் அஜித் தான் காரணம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிர வைக்கும் புகைப்படத்துடன் வெளியானது தளபதி 68 படத்தின் 2வது லுக்!

ABOUT THE AUTHOR

...view details