தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தமிழின் முன்னணி இயக்குநர்கள் இயக்கிய 'விக்டிம்' வெப் தொடரின் டிரெய்லர் வெளியானது! - ப ரஞ்சித்

இயக்குநர்கள் பா. ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் ஆகிய 4 இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள விக்டிம் வெப் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழின் முன்னணி இயக்குனர்கள் இயக்கிய 'விக்டிம்' ஆண்டாலஜி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
தமிழின் முன்னணி இயக்குனர்கள் இயக்கிய 'விக்டிம்' ஆண்டாலஜி படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

By

Published : Jul 19, 2022, 6:47 PM IST

சோனி லைவ் ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் பா ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் என 4 இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள ’விக்டிம்’ ஆண்டாலஜி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாசர், தம்பி ராமைய்யா, நட்டி நடராஜ், பிரியா பவானிசங்கர், அமலா பால், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ், பிரேம்ஜி, கணேஷ் சேகர், தென்மா என 4 இசையமைப்பாளர்கள் இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார்கள்.

கிரைம் த்ரில்லரை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் தொடர் 4 இயக்குநர்கள், 4 கதைகள், 4 வாழ்க்கை, 4 பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தது யார் என்ற கேள்வியுடன் இந்தப் படத்தின் ட்ரெய்லர் உள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ’விக்டிம்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில் கவுண்டமணி

ABOUT THE AUTHOR

...view details