தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் இணையும் 'அதிகாரம்' : இது செம மேட்டரால்ல இருக்கு! - லாரன்ஸ்

வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் 'அதிகாரம்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் இணையும் ’அதிகாரம்’ : விரைவில் படப்பிடிப்பு
வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் இணையும் ’அதிகாரம்’ : விரைவில் படப்பிடிப்பு

By

Published : Apr 29, 2022, 6:03 PM IST

வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் துரை செந்தில்குமார் இயக்கும் ’அதிகாரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தவர் எஸ். கதிரேசன். இதில் 'ஆடுகளம்' படம் ஆறு தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது.

வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் இணையும் ’அதிகாரம்’ : விரைவில் படப்பிடிப்பு

இதேபோல், இயக்குநர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில், 'உதயம்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'வட சென்னை' உள்ளிட்டப் படங்களைத் தயாரித்தார்.

இப்போது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் இணைந்து 'அதிகாரம்' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை, திரைக்கதை,வசனம் எழுதுகிறார். தமன் இசையமைக்கிறார்.

இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ். கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஏற்கெனவே இவர் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், எஸ். கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ‘அதிகாரம்’ படத்தின் இயக்குநர் பொறுப்பை, வெற்றிமாறனின் உதவியாளரான இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ஏற்றுள்ளார். இவர் ‘எதிர் நீச்சல்’, ’காக்கி சட்டை’, ’கொடி’, ’பட்டாசு’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இப்படத்தின் மூலம் முதல்முறையாக இப்படம் மூலம் ராகவா லாரன்ஸுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்

ABOUT THE AUTHOR

...view details