சென்னை: Vels Film International Dr. ஐசரி K கணேஷ் வழங்கும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,
சிலம்பரசன் நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
பிளாக்பஸ்டர் கூட்டணியான சிலம்பரசன் டி.ஆர், ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில், இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நிறைவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆக்ஷன் - த்ரில்லர் திரைப்படம் தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது. அவரது வாழ்க்கை மும்பைக்குச் சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. படத்தின் பெரும்பகுதி திருச்செந்தூர், சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிலம்பரசன் டி.ஆரின் காதலியாக சித்தி இதானி நடிக்கிறார். நீரஜ் மாதவ் (ஃபேமிலி மேன் புகழ்), ராதிகா சரத்குமார் மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
தொழில் நுட்பக்குழுவில் சித்தார்த்த நுனி (ஒளிப்பதிவு), அந்தோணி (எடிட்டர்), ராஜீவன் (தயாரிப்பு வடிவமைப்பு), பிருந்தா (நடன அமைப்பு), உத்தாரா மேனன் (ஸ்டைலிங் மற்றும் காஸ்ட்யூம்ஸ்), லீ விட்டேக்கர் (சண்டைப்பயிற்சி இயக்குனர்), அஷ்வின் குமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சுரேன் ஜி, S.அழகியகூத்தன் ( ஒலி வடிவமைப்பு), ஹபீஸ் (உரையாடல் பதிவாளர்), மற்றும் ஜெயமோகன் (எழுத்தாளர்) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
Vels Film International விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பையும், இசை, ட்ரெய்லர், வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது.
இதையும் படிங்க: விஜய், அஜித்தை சாடிய அருண்பாண்டியன்!