இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் கௌரவ ’கோல்டன் விசா’ வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பல நட்சத்திரங்களுக்கும், ஆளுமைகளுக்கும் இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டது. அந்த வரிசையில், தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கோல்டன் விசா கொடுத்து அந்நாடு கௌரவப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றதுடன் மாபெரும் வசூல் சாதனையும் புரிந்தது. தற்போது வெங்கட் பிரபு தெலுங்கில் ஒரு படத்தை நடிகர் நாக சைதன்யாவை வைத்து இயக்கி வருகிறார்.