தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா பட ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு! - Naga Chaitanya birthday

நடிகர் நாக சைதன்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 'NC22' தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா பட பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா பட பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

By

Published : Nov 22, 2022, 10:50 PM IST

Updated : Nov 22, 2022, 10:56 PM IST

நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'NC22'வை வெங்கட்பிரபு இயக்குகிறார். கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இருமொழியில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரவிந்த்சாமி, பிரியாமணி, சரத்குமார் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாக சைதன்யாவின் பிறந்தநாள் நவம்பர் 23ஆம் தேதி வருவதை ஒட்டி, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சித்தூரி ஆகியோர் இருவரும் படத்தின் ப்ரீ-லுக் வெளியீட்டு தேதியை காணொலியில் அறிவித்துள்ளனர். பார்வையாளர்களைக் கவரும் விதமான இந்த ப்ரீ-லுக் இன்று வெளியாகியுள்ளது.

இந்த ப்ரீலுக்கில் நாக சைதன்யா தீவிரமான காவல் துறை அதிகாரியாக வருகிறார். மேலும், நவம்பர் 23அன்று காலை 10.18க்கு வெளியாக இருக்கும் முதல் பார்வைக்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே ஏற்படுத்தும் விதமாக இந்த ப்ரீலுக் அமைந்துள்ளது.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் படத்திற்கு இசையமைக்கின்றனர். அபூரி ரவி இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுத SR கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

Last Updated : Nov 22, 2022, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details