தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஓடிடி தளத்தில் வெளியாகும் ’வீட்ல விசேஷம்’ - rj balaji

கடந்த மாதம் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் வரும் ஜூலை 15 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியாகும் ’வீட்ல விசேஷம்’
ஓடிடி தளத்தில் வெளியாகும் ’வீட்ல விசேஷம்’

By

Published : Jul 12, 2022, 6:40 PM IST

ஆர்ஜே பாலாஜி NJ சரவணன் ஆகியோர் இயக்கத்தில் பதாய் ஹோ, என்னும் இந்தி திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தழுவலான ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திருமண வயதில் மகன் இருக்கும் ஒரு தாய் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கும் போது, அதன்பின் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை கதைக்களமாக கொண்டு படம் அமைந்திருக்கும்.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ”லேடி சூப்பர்ஸ்டார் 75”

ABOUT THE AUTHOR

...view details