சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய நடிகர் சிபிராஜ், “வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது.
இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது. இயக்குநர் கமலகண்ணன், இயக்குனர் மணிவண்ணன் போல கருத்துக்கள் கொண்டவர். மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார்.
இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” எனப் பேசினார்.
இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது, “இந்தப் படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் பணிபுரிந்த போது, இயக்குநராக எனது வேலையை மட்டுமே செய்ய கூடி மன சுதந்திரம் கிடைத்தது.
நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்த சமூகத்தில் அதை விட பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. இது எங்கள் எல்லோருடைய படம். ஓடிடி நிறுவனத்தின் மூலம் பலரை சென்றடையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக்!