சென்னை:வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் அஜித் நடித்துள்ள துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு படமும் வெளியாக உள்ளது. இருவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படங்களின் முன்பதிவு இன்று (ஜன 8) தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
இரண்டு படங்களுக்கும் சரிசமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன. துணிவு படத்துக்கு அதிகாலை 1 மணிக்கு முதல் காட்சியும், வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சியும் திரையிடப்பட உள்ளது. ரசிகர்களின் இடையே மோதல்போக்கை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.