இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ’வாரிசு’ திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகவுள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தீபாவளி அன்றே படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பாடலின் ப்ரோமோ வெளியாகவுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.