தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இந்தப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் வாரிசு(Varisu) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் டிசம்பர் 24-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளது.
பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதேவேளையில் நடிகர் விஜயின் மேடைப்பேச்சு அரசியல் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. எனவே வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் விஜய் மெளனம் கலைவாரா? என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: ETV Bharat 2022 Roundup: வசூல் வெற்றி கண்ட தமிழ் திரைப்படங்கள் ஓர் பார்வை!