தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"நிறுத்துங்க..பீட்டர் பால் ஒன்னும் என் கணவர் இல்லை" - வனிதா அதிரடி!

நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்த பீட்டர் பால் காலமாகிய நிலையில், 'நான் அவரது மனைவியும் இல்லை; அவர் எனது கணவரும் இல்லை’ எனவும், சட்டப்பூர்வமாக திருமணம் செய்யாமல் நாங்கள் 2020-ல் ஒரு சுருக்கமான உறவில் இருந்ததோடு, அது அந்த ஆண்டிலேயே முடிந்துவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 2, 2023, 9:44 PM IST

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியானார்.‌

ஆனால், அவரைச் சுற்றி சர்ச்சைகள்‌ குறையவில்லை. பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பீட்டர் பாலைப் பிரிந்தார். இந்த நிலையில் பீட்டர் பால் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் காலமானார். இதனைத்தொடர்ந்து, ஊடகங்களில் வனிதாவின் கணவர் பீட்டர் பால் காலமானார் என்று செய்திகள் வெளியாகின. இதுவரை அமைதியாக இருந்த அவர் திடீரென்று இந்த செய்திகளுக்கு எல்லாம் கோவமாகப் பதிலளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, 'மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, 2020-ல் நாங்கள் ஒரு சுருக்கமான உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது. நான் அவருடைய மனைவியும் இல்லை, அவர் என் கணவரும் இல்லை. என் கணவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்புவதை நிறுத்துங்கள்.

நான் சட்டப்பூர்வமாக தனிமையில் இருக்கிறேன். கணவர் இல்லை. எந்த இழப்புக்கும் நான் வருத்தப்படவில்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது ஒரு தாழ்மையான வேண்டுகோள். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதையோ அல்லது கிசுகிசுப்பதையோ நிறுத்திவிட்டு உங்கள் வாழ்க்கையை கவனித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் வாழவும், எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யவும் உரிமை உண்டு' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Peter Paul: நடிகை வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details