தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் "வள்ளி மயில்"! - விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வள்ளி மயில்' திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் "வள்ளி மயில்"...!
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் "வள்ளி மயில்"...!

By

Published : Sep 20, 2022, 7:03 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், 'வள்ளி மயில்' திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி பிரமாண்ட செட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க, சுசீந்திரன் இயக்கத்தில், 1980-களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் 'வள்ளி மயில்' படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி, சிறுமலை காட்டினுள் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோயில் அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.

1980-களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான டிராமா திரில்லராக இத்திரைப்படம் உருவாகிறது. 1980 காலகட்ட கதை என்பதால் முன்னதாக, திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண்முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோயில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மும்பையைச்சேர்ந்த 50 ஸ்டன்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி, நாயகி பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர்.

மேலும், இந்தப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: காசுக்கு நடிக்க நான் தரங்கெட்டவன் கிடையாது... - நடிகர் ராமராஜன்!

ABOUT THE AUTHOR

...view details