தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மாவீரா படத்திற்காக வைரமுத்து வெளியிட்ட பாடல் எழுதும் வீடியோ - ஜிவி பிரகாஷ்குமார்

மாவீரா படத்திற்காக 2ஆவது பாடல் எழுதும் வீடியோவை வைரமுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாவீரா படத்திற்காக வைரமுத்து வெளியிட்ட பாடல் மெட்டமைக்கும் வீடியோ வெளியீடு
மாவீரா படத்திற்காக வைரமுத்து வெளியிட்ட பாடல் மெட்டமைக்கும் வீடியோ வெளியீடு

By

Published : Nov 3, 2022, 6:13 PM IST

'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' திரைப்படங்களுக்குப் பிறகு வ.கௌதமன் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் "மாவீரா". இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தை வி.கே. புரொடக்க்ஷன் தயாரிக்கிறது.

இப்படத்தின் 2ஆவது பாடல் மெட்டமைக்கும் வீடியோவை வைரமுத்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் வ.கௌதமன் கூறும்போது, ''மாவீரா படத்தின் இரண்டாவது பாடலுக்கான இசையமைப்பும் மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது. கவிப்பேரரசரின் புலமையும் ஜிவி. பிரகாஷின் அழகிசையும் காலமுள்ள வரை ஒலிக்கும். 10 நிமிடங்களில் பாட்டுத்தயாரானது.

பட்டாம்பூச்சிக்கு பட்டுத்துணி போட்டதுபோல

சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி விட்டது யாரு?

சீனிக்கட்டியில செலை ஒன்னு செஞ்சு வச்சது போல

எட்டா ஒயரத்தில் எச்சி ஊற விட்டது யாரு?

வன்னித் தமிழா வாய்யா உனக்கு

வாச்சப் பொருளைத் தாயா

பச்ச முத்தம் ஒன்னு கொடுத்தா

பற்றிக் கொள்வேன் தீயா…

அடி வஞ்சிக்கொடியே வாடி

வளர்த்த பொருளத்தாடி

பாசத்த உள்ள வச்சுப் பாசாங்க வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே

மாவீரன் மண் காக்க மானமுள்ள பெண் காக்க

அஞ்சாறுப் புலிக்குட்டி அவசரமா வேணுமடி

மாவீரா படத்திற்காக வைரமுத்து வெளியிட்ட பாடல் மெட்டமைக்கும் வீடியோ வெளியீடு

இன்னும் இன்னும் திகட்ட' இப்படி நீள்கிறது பாடல். மாவீரா மாபெரும் வெற்றி என்பதை இரண்டாவது
பாடலும் உறுதிப்படுத்தியது. பேராளுமைகள் இருவருக்கும் நெகிழ்ந்த நன்றிகள்'' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வருகிறது வாரிசு படத்தின் முதல் பாடல் ; படக்குழு வெளியிட்ட அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details