தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’ராம்கி ஐஏஎஸ் அகாடமி’ மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு - ராம்கி ஐஏஎஸ் அகாடமி மையம்

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமி மையத்தை அமைச்சர் சேகர்பாபு, கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர்.

’ராம்கி ஐஏஎஸ் அகாடமி’ - வைரமுத்து திறந்து வைப்பு!
’ராம்கி ஐஏஎஸ் அகாடமி’ - வைரமுத்து திறந்து வைப்பு!

By

Published : Jun 20, 2022, 6:21 AM IST

சென்னை: . 2017-ம் ஆண்டு முதல் ஆன்லைன் வகுப்புகளை ராம்கி ஐஏஎஸ் அகாடமி மையம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அண்ணாநகரில் 13-வது பிரதான சாலையில் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் சிறப்பு பயிற்சி மற்றும் மாணவர்கள் மீது தனிப்பட்ட கவனம் ஆகியவை இந்த நிறுவனத்தின் சிறப்பம்சங்கள் ஆகும். சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து பேசிய ராம்கி ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் ராமகிருஷ்ணன், "ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், ஆனால் அந்த கனவை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க விரும்பினேன். இந்த தொலைநோக்குப் பார்வையில் உருவானதுதான் ராம்கி ஐஏஎஸ் அகாடமி", என்றார்.

’ராம்கி ஐஏஎஸ் அகாடமி’ - வைரமுத்து திறந்து வைப்பு!

இந்தக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீசஸ்களுக்கு தேர்வாகும் மாணவர்கள் தங்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம். ராம்கி ஐஏஎஸ் அகாடமியின் தனித்துவமான மற்றும் முக்கிய அம்சங்களில் இது ஒன்றாகும். முதல்நிலை, முதன்மை மற்றும் ஆளுமைத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளிலும் சிவில் சர்வீஸ் தேர்வின் விரிவான புரிதலில் அகாடமி கவனம் செலுத்துகிறது.

’ராம்கி ஐஏஎஸ் அகாடமி’ - வைரமுத்து திறந்து வைப்பு!

இந்த மூன்று நிலைகளுக்கான அணுகுமுறை, குறிப்பிட்ட திறன்களுடன் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. "மாதிரித் தேர்வுகள், நிபுணர்களின் விரிவுரைகள், வழிகாட்டிகளுடன் நேரடி உரையாடல் ஆகியவற்றோடு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முறையான பாடத்திட்டங்களைத் தொகுத்துள்ளோம். தேர்வை எதிர்கொள்பவர்களின் திறனையும் நம்பிக்கையையும் இவை மேம்படுத்துகின்றன" என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

’ராம்கி ஐஏஎஸ் அகாடமி’ - வைரமுத்து திறந்து வைப்பு!

இதையும் படிங்க: Thalapathy 66: ஜூன் 21 மாலை 6:01 முதல் ‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக்..!


ABOUT THE AUTHOR

...view details