தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சாதிப் பெயரை நீக்கிய 'வாத்தி' பட நடிகைக்கு குவியும் பாராட்டு! - நடிகை சம்யுக்தா

'வாத்தி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சம்யுக்தா தனது பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரை நீக்கியுள்ளார். இந்தச் செயலை வரவேற்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Vaathi movie actress samyuktha removed her caste name Fans praise the actress
சாதி பெயரை நீக்கிய வாத்தி பட நடிகைக்கு குவியும் பாராட்டு..!

By

Published : Feb 7, 2023, 3:57 PM IST

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், 'வாத்தி'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்துள்ளார். மலையாள நடிகையான இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் நடிகர் சம்யுக்தா கலந்துகொண்டு பேசியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 'வாத்தி' பட இசை வெளியீட்டு விழாவில் அப்படத்தின் ஹீரோயினை பேச அழைக்கும் போது சம்யுக்தா மேனன் என தொகுப்பாளர் அழைத்துள்ளார்.

இதையடுத்து மேடையேறி வந்த சம்யுக்தா, 'தயவு செய்து எனது பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை சேர்த்து என்னை அழைக்க வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்தார். 'அதை தான் விரும்பவில்லை' எனக் கூறிய அவர் 'வாத்தி' பட டைட்டில் கார்டில் கூட தன் பெயரை சம்யுக்தா என்று தான் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். இவரின் இந்தச் செயலை வரவேற்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: kantara part 2: பிரம்மாண்டமாக உருவாகிறது காந்தாரா 2: ரிஷப் ஷெட்டி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details