இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’வாடிவாசல்’ திரைப்படம் விரைவில் வெளியாகயுள்ளது. இந்த படத்தின் திரைக்குப் பின்னால் எடுக்கப்பட்ட காட்சிகளை சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், சூர்யா மாடுபிடி வீரர்களுடன் சேர்ந்து மாடு பிடிக்க பயிற்சி எடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்துவருகின்றனர்.
’வாடிவாசல்’: சூர்யா மாடு பிடிக்கப் பயிலும் காட்சிகள் வெளியீடு - கலைப்புலி தானு
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, ‘வாடிவாசல்' படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டது.
’வாடிவாசல்’ : சூர்யா மாடு பிடிக்கப் பயிலும் காட்சிகள் வெளியீடு
இந்தத் திரைப்படம் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் சூர்யாவுடன் சேர்ந்து இயக்குநர் அமீர், நடிகை ஆண்ட்ரீயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தானு தனது யூடியூப் சேனலில் இந்தக் காணொலியை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ''கார்கி' படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யாவுக்கு நன்றி' - சாய் பல்லவி!