தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'தொடர்ந்து சமூக கருத்துள்ள படங்களில் நடிக்க ஆசை..!' - உதயநிதி ஸ்டாலின்!

தொடர்ந்து சமூக கருத்துள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஆசை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'தொடர்ந்து சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க ஆசை..!' - உதயநிதி ஸ்டாலின்!
'தொடர்ந்து சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க ஆசை..!' - உதயநிதி ஸ்டாலின்!

By

Published : Jun 5, 2022, 6:38 AM IST

Updated : Jun 5, 2022, 7:45 AM IST

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (ஜூன் 4) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின், இளவரசு, ஆரி, தன்யா ரவிச்சந்திரன், மயில்சாமி, தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதில் நடிகர் மயில்சாமி பேசுகையில், “இப்படத்தில் நான் நடிப்பதற்கு உதயநிதி தான் காரணம். காமெடி பண்ணக்கூடாது என்றனர். மகிழ்ச்சியாக இருந்தது. இந்தி தேசிய மொழியல்ல. மற்றொரு மாநில மொழி அதனை நாம் கற்றுக்கொள்ள தேவையில்லை.

'தொடர்ந்து சமூக கருத்துள்ள படங்களில் நடிக்க ஆசை..!' - உதயநிதி ஸ்டாலின்!

உள்ளூர் விமானங்களில் தமிழ் தெரிந்த பெண்களை பணியில்அமர்த்த வேண்டும் என உங்கள் வாயிலாக முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்” எனப் பேசினார்.

நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பேசுகையில், “இயக்குநரை ஒரு கிறுக்கு என நினைத்தேன். எனக்கு இந்த கதாபாத்திரம் கொடுக்கும்போது எனக்கே சந்தேகமாக இருந்தது. இப்படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்த உதயநிதி மற்றும் இயக்குனருக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசுகையில் , ”’நெஞ்சுக்கு நீதி’ வாய்ப்பு கிடைக்க ’கனா’ தான் காரணம். அதற்கு வாய்ப்பு வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு நன்றி. இப்படத்தின் கருத்து யாராவது ஒருவருக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அதுதான் எங்களுக்கு கிடைத்த விருது.

நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பை விட வேறு எந்த தலைப்பும் பொருத்தமாக இருக்காது.. தலைப்பை பெற்று தந்த உதயநிதிக்கு நன்றி” எனப் பேசினார். மேலும் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், “தயாரிப்பாளர் இல்லாமல் நடக்கும் வெற்றி விழா இது. போனி கபூருக்கு நன்றி. அவரது அடுத்த தயாரிப்பு படமான ’வீட்ல விஷேசம்’ படத்திற்கும் வாழ்த்துகள். படத்தில் ஹீரோ நான்தான் ஆனால் எனக்கு அறிமுக காட்சி சாதாரணமாக இருந்தது.

ஆனால் ஆரிக்கு மட்டும் சூப்பரான அறிமுக காட்சி. திரையரங்கில் அவ்வளவு கைத்தட்டல். நான் சொன்னதை வைத்து ’மாமன்னன்’ தான் உங்களுடைய கடைசிப் படமா என்று கேட்கிறார்கள். மாமன்னன் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. எனது நடிப்பில் 4 படங்கள் வெளிவர உள்ளது. நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’பல நாள் கனவு நினைவானது, லோகேஷுக்கு நன்றி..! ‘ - சூர்யா

Last Updated : Jun 5, 2022, 7:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details