தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கழகத் தலைவன்' ஆகிறாரா உதயநிதி..? - மகிழ் திருமேனி

நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘கழகத் தலைவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

’கழகத் தலைவன்’ ஆகிறாரா உதயநிதி? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
’கழகத் தலைவன்’ ஆகிறாரா உதயநிதி? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

By

Published : Jun 24, 2022, 10:59 PM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்‌ படத்திற்கு ’கழகத் தலைவன்’ என்று பெயரிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ படத்தில் உதயநிதி நடித்து வருகிறார்.

’கழகத் தலைவன்’ ஆகிறாரா உதயநிதி? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இப்படங்களுக்கு முன்பாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உதயநிதி ஒப்பந்தமானார்‌. அப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதில் உதயநிதி ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ’கழகத் தலைவன்’ என்று பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ’நெஞ்சுக்கு நீதி’ என்று தனது முந்தைய படத்திற்கு பெயர் வைத்தார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Video: 'மொக்கையா பாடுறீங்க சார்... என ஆர்.ஜே. பாலாஜி சொன்னார்..!' - நடிகர் சத்யராஜ்

ABOUT THE AUTHOR

...view details