‘உறியடி’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகரும் இயக்குநருமான விஜய் குமார். இவர் தற்போது, 'சேத்துமான்’ படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்ஷன், காதல் என ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
’சேத்துமான்’ இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் ‘உறியடி’ விஜய் குமார் - seththuman
சேத்துமான் படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் அடுத்து படத்தில் ‘உறியடி’ விஜய் குமார் நடிக்கிறார். இப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
’சேத்துமான்’ இயக்குநரின் அடுத்த படத்தில் நடிக்கும் ‘உறியடி’ விஜய் குமார்
இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இதையும் படிங்க:”பீஸ்ட்” படத்தில் லாஜிக் இல்லை என கலாய்த்த விவகாரம்: மன்னிப்பு கேட்ட மலையாள நடிகர்