தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கமல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்... - ராஜ்கமல் ஃபிலிம்ஸ்

ராஜ்கமல் ஃபிலிம்ஸின் 54 ஆவது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளதாக கமல் அறிவித்துள்ளார்.

கமல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்
கமல் தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்

By

Published : Jul 26, 2022, 1:23 PM IST

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் வசூல் சாதனையை செய்தது. இந்த படத்தை வழங்கிய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், அமீர்கான் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்பொழுது நிகழ்ச்சியில் மேடையில் கமல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 54 ஆவது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ’15 வருட ரெட் ஜெயின்ட் மூவீஸின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசனுக்கு நன்றி’, என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நிர்வாண புகைப்படம்: ரன்வீர் சிங் மீது எப்.ஐ.ஆர் பதிவு

ABOUT THE AUTHOR

...view details