தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உதயநிதியை வாரிசு என்ற காரணத்துக்காகவே ஒதுக்கக்கூடாது - இயக்குநர் பார்த்திபன்

உதயநிதியை வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே ஒதுக்கக்கூடாது அவரது தாத்தாவிடம் இருந்த திறமையின் ஒரு பகுதி அவரிடம் உள்ளது என்று இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்தார்.

உதயநிதியை வாரிசு என்ற காரணத்துக்காகவே ஒதுக்கக் கூடாது - இயக்குனர் பார்த்திபன்
உதயநிதியை வாரிசு என்ற காரணத்துக்காகவே ஒதுக்கக் கூடாது - இயக்குனர் பார்த்திபன்

By

Published : Dec 16, 2022, 7:49 AM IST

சென்னை: 20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று (டிசம்பர் 15) தொடங்கியது. இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட திரைப்பட விழாதான் எனக்கான விழா. எனது ஆரம்பமே இங்கிருந்து தான் தொடங்கியது. இதுவரை மூன்று தேசிய விருது வாங்கிவிட்டேன். ஆனாலும் எனது ஆசை அடங்கவில்லை. இரவின் நிழல் படத்திற்கு இதுவரை 114 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.

தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் என்னுடைய இரவின் நிழல் திரையிடுவது மிகவும் பெருமையான விஷயம். இப்படத்திற்கு செலவு செய்யப்பட்ட 21 கோடி ரூபாய் பணம் திரும்பி வந்ததா என்பது பற்றி கவலையில்லை ஆனால் உலகம் முழுவதும் மக்களை சென்றடைந்துள்ளது.

ரூ.75 லட்சத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு விழாவை நடத்த முடியாது. தமிழ்நாடு அரசு நிதியை 1 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளேன். தமிழ் சினிமாவின் பலமே படத்தின் கருதான். தமிழர்களின் அறிவுத்திறன், தரம் உயர்ந்தது.

வர்த்தக படங்கள், விருது படங்கள் என்று இருவகை உண்டு. கமர்ஷியல் படங்களுக்கு வருமானமே அதன் விருதுதான். உதயநிதியை வாரிசு என்ற காரணத்திற்காக மட்டுமே ஒதுக்கக் கூடாது. அவரது தாத்தாவிடம் இருந்த திறமையின் ஒரு பகுதி அவரிடம் உள்ளது. உயர்ந்த பதவிக்கு செல்லும்போது ஒரு முடிவு எடுத்துத்தான் ஆக வேண்டும். பெண்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பது குறித்து ஒரு படம் எடுக்க உள்ளேன். பணிகள் நடைபெற்று வருகிறது.

விஜய் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பிரச்சனை வந்தால்தான் படமும் பிரபலமாகும். இதை எல்லாம் தாண்டி வருவதே ஒரு ஹீரோயிஸம் தான். வாரிசு படத்தை நான்‌ முதலில் பார்ப்பேன்‌ என்று சொல்வதற்கே ஒரு துணிவு வேண்டும். என் இரவின் நிழல் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது. மிகச் சரியான கணக்கு வந்தது.

திரையரங்குகளில் இருந்து வரவேண்டிய பணம் உடனே கிடைக்கிறது. உதயநிதிக்கு வாய்ப்பு கொடுத்து ஊக்குவித்தால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஒரு சிறந்த அமைச்சராக வருவார். ஓடிடியிலும் பெரிய படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சினிமா திரையரங்குகளின் கையில் இருந்த சினிமா தற்போது ஓடிடி வசம் சிக்கிவிட்டது.

சிறிய படங்களை விற்பனை செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் சிறிய பட்ஜெட் படங்களை எடுக்க வேண்டாம் என்று விஷால் சொல்லியிருக்கலாம். சின்ன படங்கள் தான் திரையுலகை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டு செல்பவை. குறைந்த செலவில் நல்ல படங்கள் எடுக்க முடிந்தால் அதுதான் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். சின்ன படங்கள் தவிர்க்க முடியாதது அதுதான் சினிமாவுக்கான வளர்ச்சி எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'Pandora is Back' உலகெங்கும் நாளை வெளியாகிறது அவதார் 2!

ABOUT THE AUTHOR

...view details