மும்பை: நடிகர் ஷிவ் சுப்பிரமணியம், 2 ஸ்டேட்ஸ் (2States), ஹிச்கி (Hichki), நெய்ல் பாலிஷ் (Nail Polish) உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2 ஸ்டேட்ஸ் திரைப்படத்தில் நடிகை ஆலியா பட்டிற்கு தந்தையாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அதேபோல், டு ஹய் மெரா சன்டே (Tu Hai Mera Sunday) படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
கடைசியாக நெட்பிளிக்ஸில் வெளியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் படத்தில், ஹீரோயினுக்கு தந்தையாக நடித்திருந்தார். ஷிவ் சுப்பிரமணியம் நடிகராக மட்டுமல்லாமல், உதவி இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.