கோயம்புத்தூர்: இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல்வேறு நடிகர், நடிகைகள் நடிப்பில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
இதைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படக்குழு புரோமோஷன் வேலையில் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் (PROZONE) தனியார் மாலில் பொன்னியின் செல்வன் -2 விளம்பர நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில், படத்தில் நடித்த நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி மற்றும் நடிகைகள் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு மேடையில் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை த்ரிஷா, "நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார். இதனிடையே த்ரிஷாவிடம் விழாவில் குவிந்திருந்த ரசிகர்கள் விஜய் நடித்து வரும் LEO படத்தின் அப்டேட் குறித்து கேட்க LEO, LEO என முழக்கமிட்டனர். உடனே நடிகை த்ரிஷா நான் LEO பட ஷூட்டிங்கில் இருந்து தான் வருகிறேன் எனவும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி நல்ல இருக்காங்க என்றும் கூறினார். அதேவேளையில் மத்ததை பற்றி எல்லாம் LEO பட நிகழ்ச்சியில் பேசிக் கொள்ளலாம் எனக் பதிலளித்தார்.
பின்னர் ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சிலவை அவரிடம் கேட்கப்பட்டது, அதன் படி த்ரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார் த்ரிஷா. பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1, 2, 3 என மனத்தில் உள்ளதை போல் வரிசைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டதற்கு PS2 புரோமோஷன் என்பதால், என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு VT (வந்தியதேவன்) தான் என பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவையில் மூன்று விஷயங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். அதாவது ஒன்று கோவை மக்கள் பேசும் தமிழ், இரண்டாவது உங்களுடைய சாப்பாடு, மூன்றாவது கோவையில் எப்போதுமே அமைதி உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'காதலே காதலே' பாடல் திரிஷாவுக்கு... PS-2 Anthem வெளியீட்டு விழாவில் கார்த்தி பேச்சு...!