சென்னை: இளம் இயக்குநர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடித்துவரும் திரைப்படம், லியோ. இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்கிறார். இவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்கிறார். இதனால் நடிகை த்ரிஷா மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மூணாறிலும் நடைபெற்ற நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.
இதற்காக கடந்த மாதம் படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்து சென்றனர். அப்போது நடிகை த்ரிஷாவும் உடன் சென்றிருந்தார். அதன் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. காஷ்மீரில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட மூன்றே நாட்களில், நடிகை த்ரிஷா காஷ்மீரில் இருந்து கிளம்பியதாக செய்திகள் வெளியாகின.
அவர் எதனால் உடனே அங்கிருந்து கிளம்பினார்? லோகேஷ் உடன் சண்டையா? என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவத் தொடங்கின. ஆனால், இது உண்மையில்லை என்பதை நடிகை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். ஆனாலும், நெட்டிசன்கள் இதனை நம்ப மறுத்து ஏராளமான கட்டுக்கதைகளை பரப்பி வந்தனர். இதனிடையே த்ரிஷா ஏன் டெல்லி வந்தார் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.