தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உண்மைச் சம்பவ கதையில் நடிக்கும் த்ரிஷா! - இயக்குநர் அருண் வசீகரன்

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட புதிய படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்குகிறார்.

உண்மை சம்பவ கதையில் த்ரிஷா!
உண்மை சம்பவ கதையில் த்ரிஷா!

By

Published : Apr 25, 2022, 7:21 PM IST

சென்னை:இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உண்மைச்சம்பவ கதையில் நடிகை த்ரிஷா நடிக்கிறார். இதற்காக உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்த நிஜமான இடங்களுக்கே சென்று படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .

ஏப்ரல் 25 முதல் மதுரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், M.S. பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர். இது மட்டுமின்றி 'DANCING ROSE' புகழ், சபீர் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையின் கருவாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. 2000-களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவமே இக்கதையின் அடிப்படையாக அமைந்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details