தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Shahruk khan Jawan : புர்ஜ் கலிஃபாவில் வெளியாகும் "ஜவான்" டிரெய்லர்... ரசிகர்களுக்கு ஷாருக்கான் அழைப்பு! - ராமையா வஸ்தாவையா

Jawan Trailer : ஜவான் திரைப்படத்தின் டிரெய்லர் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி துபாய் புர்ஜ் கலிஃபாவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், முன்னதாக படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ள ஷாருக்கான், அதற்காக துபாயில் நடக்க உள்ள பெரிய விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:32 AM IST

ஐதராபாத் : ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபீகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜவான் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடர் தோல்வி படங்களை கொடுத்த வந்த ஷாருக்கானுக்கு பதான் படம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதும் படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய பெற்றது. தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் பட ரிலீசுக்கு முன்னதாக, ஜப்பானில் பதான் படம் விரைவில் திரையிடப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஷாருக்கான் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் பதான் படத்தின் வெற்றி ஜவான் படத்தின் மீதான் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். மறுபுறம், தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி பாலிவுட்டில் இயக்கும் ஷாருக்கானை இயக்குகிறார் என்பதால் இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

பெரும் பொருட்செலவில் தயாராகும் படம் என்பதால் இந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகவிருந்த ஜவான் திரைப்படம் ரிலீஸ் செப்டம்பருக்கு தள்ளிப் போனது. கடந்த மாதம் முதல் ஜவான் படக்குழு தீவிர ப்ரோமோஷனில் இறங்கி உள்ளது. முதலில் ஜவான் படத்தின் பிரிவீயூ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதன் பின் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது. இந்நிலையில் ஜவான் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஜவான் படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தகவல் கசிந்து உள்ளது.

மேலும் படத்தின் டிரெய்லர் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி துபாய் புர்ஜ் கலிஃபாவில் இரவு 9 மணிக்கு வெளியிடப் போவதாக நடிகர் ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்து, ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எதிரிதான் உன்ன தேடி வருவான்.. தனி ஒருவன் 2 படத்தின் மிரள வைக்கும் அப்டேட்!!

ABOUT THE AUTHOR

...view details