தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திரைக்கதம்பம் - இயக்குநர் மகளின் திருமணம் முதல் அடுத்த சூப்பர் சிங்கர் வரை! - படத்தின் தலைப்பு மாற்றம்

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி வட்டாரத்தில் நிகழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த சில செய்திகள் திரைக்கதம்பமாக தொகுக்கப்பட்டுள்ளது. பூ ராமுவின் இழப்பு, இயக்குநர் கே.வி.ஆனந்த் மகளின் திருமணம், தெலுங்கில் ரிலீஸாகும் மாமன்னன், அடுத்த சூப்பர் சிங்கர் போட்டி, கௌதமன் திரைப்படத்தின் பெயர் மாற்றம் என அனைத்தின் தொகுப்பு.. இதோ...

thirai kadhambam
thirai kadhambam

By

Published : Jul 6, 2023, 7:10 PM IST

Updated : Jul 6, 2023, 7:38 PM IST

பூ ராமு மரணம் தமிழ் சினிமாவிற்கு இழப்பு!கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் நடித்த ''கழுவேத்தி மூர்க்கன்'' திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படத்தில் மறைந்த பூ ராமு நடித்திருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் காலமானார். இதனை அடுத்து படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டன.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர் கௌதம் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் தோழர் பூ ராமு அவர்கள் நடித்து அவர் இறந்துவிட்ட காரணத்தால் மிக சில காட்சிகளே படம்பிடிக்க வேண்டி இருந்த நேரத்தில் அவரது மரணம் தமிழ் சினிமாவிற்கும் கழுவேத்தி மூர்க்கனிற்கும் மிகப்பெரிய இழப்பு" என்று தெரிவித்து, அவர் நடித்த படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் கே‌.வி.ஆனந்த் மகள் திருமணம்!

தமிழ் சினிமாவில் 'கனா கண்டேன்' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், கே.வி.ஆனந்த். இவர் ஒளிப்பதிவாளராக பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு, கரோனாவினால் பாதிக்கப்பட்டு காலமானார். இந்நிலையில் இன்று இவரது மகள் சாதனாஸ்ரீ-க்கும் விஷ்ணு ராஜ் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் மணிரத்னம் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

தெலுங்கில் வெளியாகும் மாமன்னன்:மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து கடந்த வாரம் தமிழில் வெளியான திரைப்படம், மாமன்னன். வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர். படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நிலையில் வருகிற 14ம் தேதி மாமன்னன் திரைப்படம் 'நாயகுடு' (Nayakudu) என்ற பெயரில், தெலுங்கில் வெளியாக உள்ளதாக ரெட் ஜெயின்ட் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 ஆரம்பம்:விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று, சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மாறி மாறி நிகழும். இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 9வது சீசன் (season 9) நடைபெற்றது. அதில், அருணா என்பவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 9வது சீசன் (season 9) வருகிற 8ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

வ.கௌதமன் இயக்கும் படத்தின் தலைப்பு மாற்றம்:வி.கே. புரொடக்க்ஷன்ஸ் தயாரிக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் ஒரு மாவீரனின் வீர வரலாற்றை வ.கௌதமன் எழுதி, இயக்குவதோடு, அவரே கதையின் நாயகனாகவும் நடிக்கிறார்.

அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்துக்கு முதலில் 'மாவீரா' எனப் பெயரிடப்பட்டது. தற்போது இதன் தலைப்பு 'மாவீரா படையாண்டவன்' என மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Jailer First Single: இணையத்தை கலக்கும் ஜெயிலர் படத்தின் 'காவாலா' பாடல்!

Last Updated : Jul 6, 2023, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details