ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ’அவதார் - 2’ இன்று(டிச.16) உலகெங்குமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட திரையரங்குகள் ’அவதார் - 2’ படத்தை வெளியிடவில்லை. காரணம் ’அவதார் - 2’ படத்தின் இந்திய வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள நிறுவனம் அதிக சதவீதம் பங்குத்தொகை கேட்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
’அவதார் - 2’ வை புறக்கணிக்கும் தமிழக திரையரங்க உரிமையாளர்கள்! இதுகுறித்து சென்னை வெற்றி திரையரங்கு உரிமையாளர் ராகேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”ஆங்கில படங்களுக்கு வழக்கமாக 50 முதல் 55 சதவீதம் தான் பங்குத்தொகை கொடுப்போம். ஆனால், இவர்களோ 75 சதவீதம் கேட்கின்றனர். இதனால் இன்று(டிச.16) எங்களது திரையரங்கில் படம் வெளியாகாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “ மீண்டும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை(டிச.17) காலை படம் வெளியிடப்படும்'' என்று கூறியுள்ளார்.
’அவதார் - 2’ வை புறக்கணிக்கும் தமிழக திரையரங்க உரிமையாளர்கள்! அதேபோல் ஏஜிஎஸ் நிறுவனமும் தங்களது திரையரங்குகளில் ’அவதார் - 2’ படம் வெளியாகாது என்று தெரிவித்துள்ளது. இதனால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ’அவதார் - 2’ படத்தை நல்ல திரையரங்குகளில் காண நினைத்த சினிமா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: 'Pandora is Back' உலகெங்கும் நாளை வெளியாகிறது அவதார் 2!