தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

துணிவு அப்டேட்: மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ள அனிருத்! - வாரிசு

துணிவு திரைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் 'சில்லா சில்லா' என்னும் பாடலை பாடியுள்ளார்.

மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ள அனிருத்
மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ள அனிருத்

By

Published : Nov 4, 2022, 10:25 PM IST

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம், துணிவு. மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜிப்ரான் இசையமைத்து வரும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ‘சில்லா சில்லா’ என்னும் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பொங்கலுக்கு விஜய் நடிக்கும் ’வாரிசு’ படத்துடன் துணிவு வெளியாவதால் விஜய், அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'துணிவு' பட டப்பிங்கை முடித்த நடிகர் அஜித் - பொங்கலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details