நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத்தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் மூன்றாவது முறையாக இணைந்து உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து இருக்கிறார்.
'துணிவு’ படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதையும் 'துணிவு பொங்கல்’ எனப் பதிவிட்டு உறுதி செய்துள்ளது.