சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’துணிவு’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘காசேதான் கடவுளடா’ பாடல் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை சமீபத்திய வைரலான இளம் பாடலாசிரியரான வைசக் எழுதியுள்ளார்.
’ஸ்விஸ்ல இருக்கு காந்திக்கும் கணக்கு’ - வெளியானது துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் - காசேதான் கடவுளடா
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் ’துணிவு’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது.
’ஸ்விஸ்ல இருக்கு காந்திக்கும் கணக்கு..!’ - வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள்
இந்தத் திரைப்படம் வருகிற பொங்கல் அன்று நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் ‘வாரிசு’ திரைப்படத்துடன் சேர்ந்து வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ஏற்கனவே வெளியான முதல் பாடலனா ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குரைக்கும் நாய்களை கண்டுகொள்ளாதீர்கள் - நடிகர் அசோக் செல்வன் ஆவேசம்