தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'தட்டி உட்டா தாறுமாறு' வெளியானது துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்! - ஃபர்ஸ்ட் சிங்கிள்

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு(Thunivu) திரைப்படத்தின் முதல் பாடலான ’சில்லா சில்லா’ பாடல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 9, 2022, 7:52 PM IST

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் துணிவு(Thunivu) படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆன 'சில்லா சில்லா' பாடல் வெளியாகியுள்ளது.

ஜிப்ரான் இசையில் வைசாக் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு ஆரம்பம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தற்போது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடல் வீடியோவில் அஜித் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

துணிவு திரைப்படம் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் 50 ஆவது திரைப்படம், போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:விமர்சனங்களால் மனம் உடையக்கூடாது - உருவ கேலிக்கு நடிகை திவ்யபாரதி பதிலடி

ABOUT THE AUTHOR

...view details