தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பொய் கணக்கு காட்டும் தயாரிப்பாளர்கள்.. துணிவு இயக்குநர் நச்.. - இயக்குநர் அ வினோத் பேட்டி

நடிகர்களை திருப்திப்படுத்தவே தயாரிப்பாளர்கள் வசூலில் பொய் கணக்கு காட்டுகிறார்கள் என்று துணிவு பட இயக்குநர் அ.வினோத் தெரிவித்தார்.

அ வினோத்
அ வினோத்

By

Published : Jan 20, 2023, 7:10 AM IST

சென்னை: அ.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதோடு வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இயக்குநர் அ.வினோத் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், பாக்ஸ் ஆஃபிஸ் ஸ்கேம் குறித்து வெளிப்படை தன்மையுடன் பேசியுள்ளார். ரூ.500 கோடி, ரூ.200 கோடி வசூல் எல்லாம் உண்மையே கிடையாது. நடிகர்களை திருப்திப்படுத்தவே தயாரிப்பாளர்கள் இப்படியொரு பொய்யை சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

ஒரு முன்னணி இயக்குனர் இப்படி துணிவுடன் பேசியிருப்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் வசூல் நிலவரத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், வாரிசு படத்தை குறிவைத்து வினோத் இப்படி பேசி உள்ளாரா என்கிற கேள்வி விஜய் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: "இவ்வளவு நாள் லைசென்ஸ் வாங்கலையா அப்போ"? - சர்ச்சையில் சிக்கிய மஞ்சு வாரியர்

ABOUT THE AUTHOR

...view details