தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வெளியானது "தக்ஸ்" படத்தின் டிரெய்லர் - Sarath Appani

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும் நடன இயக்குநர் பிருந்தா இயக்கிய 'தக்ஸ்' (thugs) திரைப்படத்தின் டிரெய்லரை பல முன்னனி பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 29, 2023, 9:07 AM IST

சென்னை: திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக "தக்ஸ்" என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக தக்ஸ் உருவாகியுள்ளது.

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான HR Pictures சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர். 2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய டிரெய்லர் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக அமைந்துள்ளது.

படத்தின் முன்னணி நடிகர்களான ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ் காந்த் ஆகியோரின் நடிப்பும், கதாப்பாத்திரத்தின் அமைப்பும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. சாம் CS-ன் அற்புதமான பிஜிஎம், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் அட்டகாசமான காட்சிகள் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நேர்த்தியான எடிட்டிங் அனைத்தும் இணைந்து, ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மேலும், எல்லாவற்றையும் விட இயக்குனர் பிருந்தாவின் மேக்கிங் ஸ்டைல் ஒரு கைதேர்ந்த இயக்குனரின் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 'தக்ஸ்' (thugs) திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் ஆகம விதிப்படியே மண்டல பூஜை - அறநிலையத் துறை

ABOUT THE AUTHOR

...view details