சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள மாமனிதன். நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வந்த இப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது.
பத்ரி நாராயணன் இயக்கத்தில் சுந்தர் சி, ஜெய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பட்டாம்பூச்சி. இப்படமும் இந்த வாரம் வெளியாகிறது.
சிபி சத்யராஜ் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள ’மாயோன்’ இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கிஷோர் இயக்கியுள்ளார். இந்த படமும் இந்த வாரம் வெளியாகிறது.
அறிமுக இயக்குனர் ஷ்யாம் சந்தீப் இயக்கத்தில் ’வேழம்’ இப்படத்தில் அசோக் செல்வன் , ஜனனி, ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படமும் திரில்லர் வகையை சேர்ந்தது. இதுவும் இந்த வார பட்டியலில் இணைந்துள்ளது.
’டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ என்ற படத்தில் கலையரசன், ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். ஜானகி ராமன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரொமாண்டிக் காமெடி வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு “பிரின்ஸ்”; பீஸ்ட் பாணியில் வெளியான ப்ரோமோ