தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மணிரத்னம், வெற்றிமாறன் ஆசைப்பட்ட கதை இது - இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில்!

மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையைப் படமாக்க ஆசைப்பட்டார்கள் என "ரத்த சாட்சி" இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் கூறினார்

மணிரத்னம், வெற்றிமாறன் ஆசைப்பட்ட கதை இது
மணிரத்னம், வெற்றிமாறன் ஆசைப்பட்ட கதை இது

By

Published : Dec 8, 2022, 11:57 AM IST

சென்னை: ஆஹா தமிழ் & மகிழ் மன்றம் தயாரிப்பில் இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரத்த சாட்சி". இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. 'ஆஹா தமிழ்' ஓடிடி தளத்தில் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜாவத் ரியாஸ் கூறியதாவது,”இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். இந்த படம் எனது மனதுக்கு நெருக்கமான படமாக மாறியது. இந்த படத்தை மெருகேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. ஆனால் அது எங்களை எந்த வகையிலும் சோர்வாக்கவில்லை. படத்தில் 6 பாடல்கள் இருக்கிறது” என்றார்.

இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் கூறியதாவது,”ஜெயமோகன் இந்த கதையைக் கொடுக்கவில்லை என்றால் என்னால் சினிமா எடுத்து இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக்கதையை படமாக்க ஆசைப்பட்டார்கள். அவர்களைத் தாண்டி எனக்கு இந்த கதையைக் கொடுத்தார். பல தயாரிப்பாளர்களைத் தாண்டி ஆஹாவின் அல்லு அரவிந்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கதை கூறிய பிறகு தான் இந்தப்படம் ஆரம்பித்தது.

கதையில் இருக்கும் கதாபாத்திரங்களை ஒத்து போகும் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம். நடிகர்கள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் உடைய பணி இந்த கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் உடைய பங்கு கதையின் போக்குடன் ஒத்து போயுள்ளது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க:பா.ரஞ்சித் - கலையுலகில் ஒரு கலகக்குரல்!

ABOUT THE AUTHOR

...view details