சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. மாறன் படத்தினை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று, 50 நாள்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை தொடர்ந்து, மீண்டும் தனுஷ் - மித்ரன் ஜவஹர் காம்போ இணைந்த படம் ‘திருச்சிற்றம்பலம்’. இதில், பாரதிராஜா, நித்யா மேனன், ப்ரியா பாவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர்.
அதேபோல அனிரூத், தனுஷ் கூட்டணி ஏழு வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் இணைந்துள்ளதால், ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் படத்தை கண்டு கழித்தனர். வெற்றிகரமாக அமோக வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிய இப்படம், 50 நாள்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
திருப்புமுனையான திருச்சிற்றம்பலம் சாதாரன டெலிவரிபாய் வாழ்க்கையில் ஏற்படும் காதல் ஒருபுறம், சிறு வயது முதல் மனதில் காதலுடன் காத்திருக்கும் பெண்ணின் கதை ஒருபுறம், தந்தை மகன் பாசம் ஒருபுறம் என்று மிக சிறப்பான கதைகளத்தை இந்த கொண்டிருப்பதால் மக்களின் வரவேற்பை பெற்றதாக அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் திரையிடப்பட்ட ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்...