சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ’திருச்சிற்றம்பலம்’. இதில் தனுஷுடன் சேர்ந்து இயக்குநர் பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் விதமாக சில நாள்களாக முன்பு வீடியோக்கள் வெளியாகின.
அதைத்தொடர்ந்து இன்று (ஜூன் 19) தந்தையர் தினத்தை முன்னிட்டு ‘திருச்சிற்றம்பலம்’ படக்குழு சிறப்பு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவும் தனுஷும் செல்போனில் பேசிக்கொள்வது போல் உருவாக்கப்பட்ட இந்தக் காட்சியில் நகைச்சுவையான தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உரையாடல் இடம்பெற்றுள்ளது.