தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

உதயநிதி LCU குறித்து பதிவிட்ட ட்வீட்டில் சஸ்பென்ஸ் உள்ளது, நாளை தெரிந்து கொள்ளுங்கள் - லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்தை இயக்குவது விட வேறென்ன சந்தோஷம்

உதயநிதி லியோ படம் LCUவில் இடம் பெறுவது குறித்து பதிவிட்ட ட்வீட்டில் சஸ்பென்ஸ் உள்ளது அது நாளை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என லோகேஷ் கனகராஜ் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2023, 5:08 PM IST

சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், சாண்டி, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதாலும், மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் விஜய் கூட்டணி என்பதாலும் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், “உயர்நீதிமன்ற உத்தரவால் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. அரசிடம் சிறப்பு காட்சிக்கு வேண்டுகோள் வைத்தும் அனுமதி கிடைக்கவில்லை.

விஜய் படம் என்றாலே சிறு பிரச்சனைகள் வருகிறது. டிரெய்லரில் விஜய் ஆபாச வார்த்தை பேசியது குறித்து கேட்டதற்கு, விஜய் இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக அந்த ஆபாச வார்த்தை பேசினார். அப்போது விஜய் சார் பேச தயங்கினார். நான் தான் பேச சொன்னேன். அவ்வாறு விஜய் ஆபாச வார்த்தை பேசியதற்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன் என்றார்.

ஆபாச வார்த்தை படத்தில் இடம் பெறாது. நான் நடிகர்களின் ஸ்டார்டம்மில் சிக்கவில்லை. ஒரு யுனிவர்ஸ் உருவாக்கும் அளவிற்கு எனக்கு சுதந்திரம் உள்ளது. நட்சத்திர ஹீரோ அனைவரும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். அடுத்த படத்தில் ரஜினிகாந்தை இயக்க போகிறேன். அதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கிறது. ரஜினிகாந்தை வைத்து நான் இயக்கும் படம் வேற ஜானரில் இருக்கும். அதே போல் இரும்பு கை மாயாவி வேற ஜானரில் இருக்கும்.

உங்கள் படங்களில் போதைப்பொருள் தொடர்ச்சியாக வருவதன் காரணம் குறித்த கேள்விக்கு, போதை பொருள் வேண்டாம் என படத்தில் காட்டி வருகிறேன். மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாதியில் போதைபொருள் விழிப்புணர்வு குறித்து தான் பேசியிருப்பேன் என்றார். உதயநிதி LCU என நேற்று ட்வீட் செய்தது குறித்து கேட்டதற்கு, அவர் LCU என ஹேஷ்டேக் பக்கத்தில் எமோஜி போட்டிருப்பார். அதை யாரும் கவனித்திருக்க வாய்ப்பு குறைவு. நாளை படம் பார்த்து LCU யுனிவர்சில் இடம் பெற்றுள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

இதையும் படிங்க:லியோ படத்தின் காலை-7மணிக்கு திரையிட இருந்த முதல் காட்சி ரத்து: தமிழ்நாடு அரசின் உத்தரவு என்ன?

ABOUT THE AUTHOR

...view details