தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"லியோ டிரெய்லர் நான் பார்க்கவில்லை" - நைசாக நழுவிய நடிகர் புகழ்! என்ன காரணம்? - tamil cinema news

கதையோடு ஒன்றிப் போகும் நகைச்சுவைகள் பெரிதாக வரவேற்கபடவில்லை என்றும் நிறைய நகைச்சுவை கதைகளை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் என்றும் நடிகர் புகழ் கூறினார்.

கதையோடு ஒன்றிப் போகும் நகைச்சுவைகளுக்கு தற்போது பெரிதாக வரவேற்பில்லை - நடிகர் புகழ்
கதையோடு ஒன்றிப் போகும் நகைச்சுவைகளுக்கு தற்போது பெரிதாக வரவேற்பில்லை - நடிகர் புகழ்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:32 PM IST

கதையோடு ஒன்றிப் போகும் நகைச்சுவைகளுக்கு தற்போது பெரிதாக வரவேற்பில்லை - நடிகர் புகழ்

கோவை:பந்தைய சாலை உள்ள தனியார் நிறுவனத்தின் ஐந்தாவது கிளை துவக்க விழாவில், நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தற்போது கே.டி குஞ்சுமோகனின் ஜென்டில்மேன் 2, ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக விஜய் மில்டன் திரைப்படத்தில் நடிக்கிறேன், இன்னும் நான்கு படங்களில் நடித்து கொண்டு இருக்கிறேன்.

அஸ்வின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தார்கள். நான் எப்போது அந்த புகைப்படத்தை எடுத்தேன் என்று பார்த்த போது, கிரிக்கெட் போட்டிக்கு செல்லும் போது என்னைப் போன்ற சாயலில் உள்ள ஒரு நபருடன் அஸ்வின் அந்த புகைப்படத்தை எடுத்து இருந்தார்.

1947 மாதிரி ஒரு படம் அமைந்தால் ஆக்சன் படங்களில் நடிப்பேன். கதையோடு ஒன்றிப்போகும் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தான் இப்போது வைக்கிறார்கள். முந்தைய காலங்களில் டிராக் காமெடி இருந்தது. கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு ஆகியோருக்கு படங்களில் டிராக் காமெடி காட்சிகள் இருந்தன.

தற்போது அந்த ட்ராக் இல்லை. கதையோடு ஒன்றிப் போகும் நகைச்சுவைகள் பெரிதாக வரவேற்கபடவில்லை, நிறைய நகைச்சுவை கதைகளை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். நடிகர் சந்தனாத்துடன் இரண்டு படங்களில் நடித்து இருக்கிறேன். டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு நிறைய நகைச்சுவை படங்களை நடிக்கலாம் என சந்தானம் கூறி இருக்கிறார்.

மக்களை சிரிக்க வைக்க கொஞ்சம் நகைச்சுவைகளை செய்து கொண்டு தான் வருகிறோம். யாரும் யாரிடத்துக்கும் வர முடியாது. நாம் சென்று கொண்டிருந்தால் நமக்கு ஒரு இடம் கிடைக்கும், அந்த இடத்துக்கு செல்ல வேண்டும், நெகட்டிவ் கமெண்ட்டாக பார்த்து துவண்டு போய்விட்டால் நம்மை விரும்புவர்களுக்காக ஓட முடியாது.

ஓடிக்கொண்டே இருந்தால் நெகட்டிவாக போகிறவர்கள், ஒரு நாள் நமக்கு பாசிட்டிவாக மாறுவார்கள். ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார். லியோ படத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் புகழ், "அதில் இருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏன் கெட்ட விஷயங்களை எடுக்கிறீர்கள், குழந்தை பிறந்த பிறகு பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன். லியோ டிரெய்லரை பார்க்கவில்லை" என்று பதில் அளித்தார்.

இதையும் படிங்க: முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணிடாதீங்க.. லோகேஷ் வைத்த ட்விஸ்ட்!

ABOUT THE AUTHOR

...view details