சென்னை: டிஜிட்டல் உலகத்தில் எது எந்த நேரத்தில் வைரலாகும் என்று யாருக்குமே தெரியாது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் லேட்டஸ்ட் டிரெண்ட் இந்த தெம்மாடிக் காத்து தான்.
கேர்ள்ஸ் ஹாஸ்டல் வைரல் பாட்டாக, வித்தியாசமான நடன அசைவுகளுடன் வைரலாகத் தொடங்கியது, இந்த ரீல்ஸ். ஆனால், இந்த ரீல்ஸை செய்வதற்கென ஒரு நடைமுறை உள்ளது. இதற்கென ஒரு டீம் வேண்டும். இடம் ரொம்ப முக்கியம். கேர்ள்ஸ் ஹாஸ்டலாக இருந்தால் ரீல்ஸ் செய்வதற்கு ரொம்ப வசதி. இரண்டு, இரண்டு பேராக ஜோடி சேர்ந்து ஒத்திகை பார்த்துவிட்டால், ரீல்ஸ்க்கு தயார் ஆகிவிடலாம்.
பொது இடங்களில் ரீல்ஸ் செய்தால், கூடுதலாக Blooper Video கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. பெண்கள் மட்டும் தான் பண்ண வேண்டுமா? நாங்களும் செய்வோமென்று களம் இறங்கிருக்கிறார்கள், ஆண்கள்.
நதி மூலம், ரிஷி மூலம் கண்டுபிடிக்க முடியாது என்பது போல, இந்த டிரெண்டை தொடங்கி வைத்தது யாரென்று தெரியவில்லை. ஆனால், இந்தப் பாடல் எங்கிருந்து வந்ததென்று பார்ப்பது எளிது.
2004-ல் மலையாளத்தில் ரிலீஸ் ஆன ரெய்ன் ரெய்ன் கம் அகெய்ன்(Rain Rain Come Again) படத்தில் இடம் பெற்றது தான் இந்தப் பாடல். இசையமைப்பாளர் ஜேஸ்ஸி கிப்ட்(Jassie Gift) இசையில் குத்து பாடலுக்கே உரிய அம்சங்களுடன் இருந்தது. வெளியான நேரத்தில் படம் நன்றாக வணிகம் ஆகவில்லை என்றாலும்; இப்போது பாடல் டிரெண்ட் ஆகிறது. ஜேஸ்ஸி கிப்ட் இசையில் தமிழில் லஜ்ஜாவதி பாடலும் இன்றைக்கும் பல பேருடைய விருப்பப் பாடலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேர்ள்ஸ் ஹாஸ்டல் தெம்மாடிக் காத்து - எங்கிருந்து வந்தது ட்ரெண்டிங்க் ரீல்ஸ் இதையும் படிங்க:இரண்டு படங்கள் நடித்துவிட்டால் கலைமாமணியா...? - நீதிபதிகள் கேள்வி