தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு - போலீஸ் விசாரணை - Defamation case against media too

நடிகை பார்வதி நாயர் வீட்டில் விலையுயர்ந்த பொருள்கள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatநடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு - காவல்நிலையத்தில் புகார்
Etv Bharatநடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு - காவல்நிலையத்தில் புகார்

By

Published : Nov 13, 2022, 9:05 PM IST

சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் பெயருக்கும் கேடு உண்டாகும் வகையில் ‌அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பார்வதி நாயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

இதனிடையே நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம் ரூபாய், மூன்று லட்சம் ரூபாய் என லட்சக் கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை திருடி சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:முதியோர்களுக்கு உணவளித்து மகிழ்ந்த நடிகை சித்தி இத்னானி!

ABOUT THE AUTHOR

...view details