தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இந்த வார திரையரங்கு, ஓடிடி ரிலீஸ் படங்கள்! - கல்யாணம் கமணீயம்

வாரிசு, துணிவு, வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரைய்யா, கல்யாணம் கமணீயம் உள்ளிட்ட திரைப்படங்கள் இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளன.

ott
ott

By

Published : Jan 13, 2023, 5:02 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

துணிவு: எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

துணிவு

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம்‌ வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

வாரிசு: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். குடும்பப் பின்னணியில் கதை உருவாகியுள்ளது.

வாரிசு

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உள்ளது. வாரிசு திரைப்படமும் கடந்த 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வீர சிம்ஹா ரெட்டி: இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில், நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் வீர சிம்ஹா ரெட்டி.

வீர சிம்ஹா ரெட்டி

தெலுங்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த இப்படம் நேற்று(ஜன.12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலகிருஷ்ணா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வால்டர் வீரைய்யா:கே.எஸ்.ரவீந்தரன் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படம் வால்டர் வீரைய்யா. இப்படத்தில் ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கல்யாணம் கமணீயம்: சந்தோஷ் ஷோபன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் 'கல்யாணம் கமணீயம்'. இப்படத்தை அனில் குமார் இயக்கியுள்ளார்‌. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லத்தி: வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம், லத்தி. கடந்த மாதம் 22ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இந்நிலையில் நாளை இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ்: மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் "முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்".

உன்னி முகுந்தன் அசோசியேட்ஸ்

இப்படத்தை அபினவ் சுந்தர் இயக்கி இருந்தார். இப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர்கள் அஜித், விஜய் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details