நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக விஜய் பங்கேற்ற 'கேள்வி - பதில்' நிகழ்ச்சி நேற்று(ஏப்.10) ஒளிபரப்பப்பட்டது.
'பீஸ்ட்' படக்குழுவினரை தன் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரில் அழைத்துச்சென்ற நடிகர் விஜய்! - ’பீஸ்ட்’ படக்குழுவினரை தன் ’ரோல்ஸ் ராய்ஸ்’ காரில் அழைத்து சென்ற விஜய்
விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் விஜயுடன் 'பீஸ்ட்' படக்குழுவினர் பயணம் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
’பீஸ்ட்’ படக்குழுவினரை தன் ’ரோல்ஸ் ராய்ஸ்’ காரில் அழைத்து சென்ற விஜய்
இதில் இயக்குநர் நெல்சன் விஜயிடம் கேள்வி கேட்டார். இந்நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின்போது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் விஜயுடன் 'பீஸ்ட்' படக்குழுவினர் பயணம் செய்த வீடியோவை வெளியிட்டனர். அதில் விஜய், நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், சதீஷ் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் காவல்துறைக்கு சொன்ன அட்வைஸ்... கேட்குமா தமிழ்நாடு போலீஸ்?