தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா..ஜி.பி.முத்து? அதிர்ச்சியில் ஆர்மி.. - ஜிபி முத்து ஆர்மி

சமூக வலைதளத்தில் பிரபல டிக்டாக்கரும், பிக் பாஸ் போட்டியாளருமான ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாகப் பரவிய தகவல் அவரது ஆன்லைன் ஆர்மியிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஜி.பி.முத்து...? அதிர்ச்சியில் ஆர்மி
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஜி.பி.முத்து...? அதிர்ச்சியில் ஆர்மி

By

Published : Oct 20, 2022, 7:43 AM IST

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி அதனின் சீசன் நேரங்களில், சமூக வலைதளத்திலும் பொதுமக்களிடத்திலும் பெரும் பேசுபொருளாக இருந்து வருவது வழக்கம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் - 6, தற்போது எல்லோராலும் மிக விமர்சையாகப் பேசப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம் ஆரம்பித்த ஒரே வாரத்தில் விறுவிறுப்பான போட்டி மனப்பான்மையுடன் விளையாடி வரும் பிக் பாஸ் போட்டியாளர்கள். மறுபக்கம், தொன்றுதொட்டு வருவதுபோல், இந்த சீசன் போட்டியாளர்களுக்கும் ஆர்மி வைத்து வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள்.

குறிப்பாக இந்த சீசனில், இரு போட்டியாளர்களுக்கு ஆட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டனர் வலைதளத்தினர். அவை, ஜி.பி.முத்து ஆர்மி மற்றும் ஜனனி ஆர்மி. இந்த இரு ஆர்மி இடையே சமூக வலைதளத்தில் போட்டியே நிகழ்ந்து வருகிறது. தன் செதுக்கி வைத்த கண்கள் கொண்டு இளசு மனங்களை பார்த்த கணமே, கொள்ளை கொண்டமையால், பல இளைஞர்களின் கனவுக் காதலியாகிவிட்டார் பிக் பாஸ் ஜனனி.

அவர் கொஞ்சிக் கதைக்கும்(பேசும்) இலங்கைத் தமிழில் கரைந்துபோனது நம் இளைஞர்கள் நெஞ்சம். மறுபக்கம் உள்ள ஜி.பி.முத்துவைப் பொறுத்தவரை, இவர் ஆரம்பத்தில் இருந்தே நெட்டிசன்களால் பெரும்வாரியாகக் கொண்டாடப்படுபவர். மீம் கிரியேட்டர்கள், இளையதலைமுறையினருக்கு மிகவும் பிடித்த ஓர் நகைச்சுவை மனிதராக இருந்து வருகிறார் ஜி.பி.முத்து.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜி.பி.முத்துவின் கள்ளங்கபடமற்ற வெகுளியான குணம் அனைவராலும் ஈர்க்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், நேற்றிலிருந்து ஒரு செய்தி சமூகவலைதளங்களில் ஜீபி முத்து ஆர்மிக்கு அதிர்ச்சி தரும் வண்ணம் பரவி வருகிறது. ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டைவிட்டுச் செல்ல விருப்பப்படுவதாகவும், அதற்காக பிக் பாஸிடமே அதைக் கேட்டதாகவும் செய்திகள் பரவின.

இதையடுத்து, நேற்று(அக்.19) ஒளிபரப்பான எபிசோடில் ‘கதை சொல்லவா’ டாஸ்க்கில் தனக்கான முறை வருவதற்கு முன்பே குடும்பத்தை நினைத்து மிகவும் உடைந்து போனார் ஜி.பி.முத்து. தன் கதையை சொன்னால் தான், இன்னும் உடைந்து போக வாய்ப்புண்டு என தன் கதையை சொல்லும் முன்னரே சக போட்டியாளர்களை பஸரை அழுத்தும் படி கேட்டுக்கொண்டார்.

பின் தனது வாய்ப்பு வந்ததும், என்றும் கலகலப்பாக ஆடிப்பாடும் ஜி.பி.முத்து மிகவும் மன வேதனையுள்ளவராக உடைந்த குரலில், தன்னால் முடியவில்லை எனக் கூறினார். அதன் பின், அவர் தனது கதையையும் சொல்லவில்லை. அதற்கு மேல் எபிசோடிலும் எதையும் காண்பிக்கவில்லை.

ஒருவேளை தன் மனைவி, குழந்தைகளைப் பிரிந்த சோகத்தால், பிக் பாஸை விட்டே வெளியேர ஜி.பி.முத்து நேரடியாகக் கேட்டிருக்கக் கூடும். 24 மணி நேர ஷோவைப் பார்த்து வரும் சிலரும் சமூக வலைதளத்தில் அப்படித் தான் பேசி வருகின்றனர். மேலும், தங்களுக்கு பிடித்த மனிதரான ஜி.பி.முத்து உடைந்துபோனதால் அவரின் ஆன்லைன் ஆர்மியும் சோகத்தில் ஆழ்ந்தது.

இருப்பினும் மறுபக்கம், தன் குடும்பத்தாரின் குரலையோ, காணொலி வாயிலாக அவர்களின் முகத்தையோ பார்த்தால் ஜி.பி.முத்து பழைய நிலைக்குத் திரும்பி, மீண்டும் உற்சாகமாக பிக்பாஸ் வீட்டில் உலா வர வாய்ப்புள்ளது என்றும், அவர் நிச்சயம் எப்படியாவது சரியாவார் என்றும் சமூக வலைதளத்தில் நம்பிக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: BB Day 9: எனக்கு Girlfriends கிடையாது...! கோளாறாக வேலை செய்கிறாரா அசல் கோளாறு...?

ABOUT THE AUTHOR

...view details