தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இன்று சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் - election happening today

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது

இன்று நடக்கிறது சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்
இன்று நடக்கிறது சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்

By

Published : Jul 10, 2022, 3:11 PM IST

Updated : Jul 10, 2022, 3:20 PM IST

சென்னை:சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2022-25ஆம் ஆண்டுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. நடிகர் ரவி வர்மா தலைமையில் உழைக்கும் கரங்கள் அணி, நடிகர் சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் வசந்தம் அணி, நடிகர் என்.எஸ்.செல்வம் தலைமையில் புது உதயம் அணி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் பதகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி கணேசன் தலைமையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 2000 பேர் உறுப்பினர்களாக உள்ள சின்னத்திரை நடிகர் சங்கத்தில் 1,506 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நேரமாகும். தற்போது விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியானது; நாளை முதல் இசை

Last Updated : Jul 10, 2022, 3:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details