ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.