தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நாக சைதன்யா - வெங்கட்பிரபு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது - cinema updates

நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் 'NC22' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்திம் தொழில்நுட்ப குழு மற்றும் கிரியேட்டிவ் குழு விவரம் அறிவிப்பு!
நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்திம் தொழில்நுட்ப குழு மற்றும் கிரியேட்டிவ் குழு விவரம் அறிவிப்பு!

By

Published : Sep 23, 2022, 7:34 PM IST

நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் 'NC22' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ் - தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும். அதேபோல, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஸ்ரீனிவாசா சித்தூரி, 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின்'கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கிறது.
அழகான காட்சிகளைப் படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான S.R. கதிர் இந்தப்படத்தில் இணைகிறார். படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுதுகிறார். படத்தின் எடிட்டிங்கை வெங்கட் ராஜன் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பிற்காக படக்குழு ராஜீவை தேர்வு செய்துள்ளது.
கலை இயக்கத்தைச் சத்யநாராயணா கையாள உள்ளார். முக்கிய சண்டைக்காட்சிகளை படமாக்குவதற்காக சர்வதேச ஆக்‌ஷன் இயக்குநரான யானிக் பென் இதில் இணைந்துள்ளார். அதேபோல, மகேஷ் மாத்யூவும் 'NC22'-ல் அங்கமாக உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் தொழில்நுட்பக்குழு தொடர்பாக, தற்போது வெளியாகியுள்ள விவரங்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும். ஆக்‌ஷன்- என்டர்டெயினராக மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் இப்படம் தயாராக இருக்கிறது. பவன் குமார் இந்தப்படத்தை வழங்குகிறார்.

ABOUT THE AUTHOR

...view details